Wednesday, November 18, 2009

பிடித்த கவிதைகள்

பேசும் கண்கள்
கவிதை பேசும் கண்கள்...!காதல் பேசும் புருவம்....!எதுவும் பேசாத உதடு......!_இருந்தும் எல்லாம் பேசிவிடும் உன் மௌனம் ......!

வரம்வேண்டும்
காதலனே .......! உன்னை காணவில்லையே ... மறுபடியும் நான் சுவாசித்து தீரவேண்டும் என்னை கடந்துபோன உன் மூச்சுக்காற்றை ....... ஒருமுறை வருவாயா...? என் மனம் மகிழ ஒருவரம் தருவாயா....!

கண்ணீர் துளி
உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட!....

நிரந்தரமான நினைவுகள்
மரணத்தை தேடிச்சென்றஎந்தன் வாழ்கை மறுபடியும்வாழநினைத்தது இந்த மண்ணில்என் உயிர் வாழ்வதற்காக அல்ல......உன் நினைவுகள் சாகக்கூடாது
என்பதற்காக..... !

Saturday, June 13, 2009

படித்ததில் பிடித்தது

1) ஒருவர் இலக்கை எந்தவகையில் நிர்ணயித் தால் வெற்றி என்பது உறுதியாகும்?
இலக்கு என்பது நமக்குள்ளே இருக்க வேண்டும். உள்முகமாக நாம் நம்மை உணரும் போது தான் எடுத்துக்கொண்ட இலக்கை நோக்கி நன்கு திட்டமிட்டு, செயல்புரிந்து சாதிக்க முடியும். வெளியுலக இலக்கு என்பது தீர்மான மில்லாத முழுமையாக அறிந்திடாத உணர்ந்திடாத தேடலாகத்தான் இருக்கும். தனக்குள்ளே வகுக்கப்படுகிற இலக்கால் கிடைக்கும் வெற்றி என்பது எப்போதும் நம் உடன் இருக்கக்கூடியதாக அமையும். அதனால் இலக்கு நிர்ணயித்தலை தனக்குள்ளே வைத்தலே நல்லதாகும்.
உயர்வாக நினை அப்போதுதான் குறைவான வெற்றியையாவது பெறமுடியும் என்று போதிப்பதை இனி விட்டு விடவேண்டும். நினைப்பதை துல்லியமாக ஆராய்ந்து, அதற்கான செயல்வடிவம் கொடுத்து நினைத்தபடி சாதிக்கக்கூடிய போதனையே இனி வேண்டும்.
நம் மூளையானது அளவிட முடியாத ஆற்றலைப் பெற்றதாகும். உலகத்திலேயே நிரம்ப ஆற்றல் பெற்றவர்கள் என்று சொல்லக் கூடியவர்களே தங்கள் மூளையில் 2ணீ சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சித் தகவல் ஒன்று. இன்னும் 97ணீ சதவீதம் மூளையை அவர்களே பயன்படுத்தாமல்தான் வைத்திருக்கிறார்கள் என்கிறபோது நாம்?
ஏனோதானோவென்று இல்லாமல், முழுமையாக எடுத்துக்கொண்ட வேலையில் நம்மை அர்ப் பணித்தால் அளவற்ற சாதிப்பை நம்மால் நிகழ்த்தி விட முடியும். ஆம். நம் மூளைக்கு சரியான வேலையைக் கொடுக்கக் கூடிய பக்குவத்தை பெறும் போதுதான் எடுத்துக்கொண்ட இலக்கில் எல்லோரும் வெற்றியை ருசிக்க முடியும்.

2) உயர்வாக வாழவேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அந்த உயர்ந்த வாழ்க்கையை எல்லோராலும் எட்ட முடிவதில்லையே ஏன்?
கடவுள் என்கிற மாபெரும் சக்தியால் உருவாக்கப்பட்டவர்கள் நாம் என்கிற எண்ணம் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டும். அந்த சக்தியால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்க்கும் ஏதேனும் ஒரு சிறப்பு நிச்சயம் இருக்கிறது. ஆகவே அந்தச் சிறப்பு என்னவென்பதை கண்டறிந்து வாழ்க்கையை நலமானதாக வளமானதாக அமைத்துக்கொள்வதென்பது நம்மிடம்தான் இருக்கிறது.
வளர்ப்பு சூழல், வாழும் சூழல் ஒருவரை மாற்றும் என்பதால், எத்தகைய சூழலாக இருந்தாலும் அதை நல்லதாகவே அமைத்துக் கொள்ளக்கூடிய பக்குவத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பிறரோடு ஒப்பீடு என்பதே கூடாது. இதை பெற்றோர்களே தங்கள் அறியாமையினால் குழந்தைகளை வளர்க்கும் போது அவரைப்பார் இவரைப்பார் என சொல்லிச் சொல்லியே வளர்ப்பதனால் அடுத்தவர்களுக் காகவே, அடுத்தவர்களைப் பார்த்துப் பார்த்தே வாழ வேண்டியதாக அமைந்துவிடுகிறது.
நல்லவனாக உருவாக வேண்டியவர்கள் வாழ்க்கையில் நடிகர்களாக உருவாகி விடுகிறார்கள் என்பது வேதனையளிக்கிற செயல்பாடு.
நாம் யார் என்பதை இறுதிக்காலம் வரை அறியாமலேயே நம் பிறப்பை முடித்துக் கொள்ளவா பிறப்பெடுத்தோம்? இல்லை.
தன்னை உணர்ந்து கொண்டு, இன்று இருக்கிறதை விட நாளை இன்னும் வளர்ந்தவனாக தனக்குள்ளேயே போட்டிகள் இருக்கும்படியாக வளர வேண்டுமே தவிர அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு வளர்தல் ஒருவருக்கு மகிழ்ச்சியும் தராது; வளர்ச்சியும் தராது.
தனக்குள்ளே தன் சாதிப்பிற்குள்ளே போட்டி என்பது இருந்து விட்டால் - அடுத்தவர்கள் மீது போட்டி இருக்காது; பொறாமை இருக்காது; எங்கும் அன்பு வளரும்; சமத்துவம் ஓங்கும்; சமுதாயம் மலரும்.
நம் மூளை ஒரு இலட்சம் கம்ப்யூட்டர் களுக்குச் சமம் என்று சொல்கிறார்கள். அதனால் நம் மன, உடல் உபாதைகளை மூளையிடம் அர்ப்பணித்து விட்டாலே அதுவே நம்முடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தந்து விடும். ஆனால் அதை நாம் செய்வதில்லை. வேகம், பதட்டம், இவைகளை உடன் அழைத்துக் கொண்டு வாழ்க்கையை எப்பவும் ஏதேனும் சங்கடங்களுக்குள் சிக்க வைத்துக் கொள்கிறோம்; ஏதோ பிறந்தோம்; ஏதோ வாழ்ந்தோம்; இறந்தோம் என்று தான் இருக்கிறோம். ‘உணர்தல்’ ஒவ்வொரு வருக்குள்ளும் வரும்வரை ‘உயர்தல்’ இயலாத ஒன்று.

நன்றி -http://www.thannambikkai.net/

Thursday, June 4, 2009

இங்கிலாந்தில் தமிழ்


இங்கிலாந்தில் எமது தாய் மொழியாம் தமிழ் வளர்கிறது என்பதற்கு அருகே உள்ள படம் சிறந்த உதாரணம். தமிழ் வளர்வதற்கு நம் பிள்ளைகளிற்கு தமிழை தாய் பாலாய் ஊட்டி வளர்க்க வேண்டும். இது தான் இன்றைய தாய் தந்தையரின் தலையாய கடமை. தொடக்கி வைப்போம் தொடரும் என்ற நம்பிக்கையுடன்......

Tuesday, June 2, 2009

முயற்சி

சும்மா இருப்பதை விட முயற்சி செய்து தோற்பதே மேல். வாழ்கையை சுவாரசியமாக வாழ வேண்டும் என்றால் நாம் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்.

Sunday, May 31, 2009

கருத்துக்களம்

இது வாசகர்களாகிய உங்களின் குரல். நீங்கள் தான் இந்த பதிவின் எழுத்தாளர்கள். உங்கள் கருத்தை முன்வையுங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து இந்தப் பதிவை எழுதுவோம். இறுதியில் எல்லாக் கருத்துகளையும் சேர்த்து சாராம்சமாக வார இறுதியில் வெளியிடுவோம்.

இந்த வார தலைப்பு - உலக நாடுகளில் தமிழ் இன நிர்வாகிகளின்(Managers) எண்ணிக்கை மற்றைய இன நிர்வாகிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவு. இதற்கு காரணம் தமிழ் மக்கள் முடிவு எடுக்கும் போது தங்கள் உணர்ச்சிகளில் இருந்து தான் எடுகிறர்களே அன்றி அறிவு பூர்வமாக அல்ல.

நீங்கள் முடிவு எடுக்கும் போது எப்படி எடுக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் வார இறுதியில் ஒரு தொகுப்பாக வெளியிடுவோம்.
உங்கள் ஆதரவுக்கு முன்கூட்டிய நன்றிகள்

நான்

நான் யார் என்பது எனக்கே தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் எடுக்கும் முடிவுகளில் தான் எனது வாழ்க்கை பயணிக்கிறது. எங்களில் எத்தனை பேர் எம்மை நம்புகிறோம்? கடவுளை நம்பும் அளவுக்கு கூட நம்மை நம்புவதில்லையே?

இதை எழுதும் போது பழைய பாடல ஒன்று நினைவுக்கு வருகிறது

"உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் ..."

அறிவால் முடிவெடுத்து அகிலத்தை ஆளுவோம்.